பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012


ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
 



மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.  சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ -நாஞ்சில் சம்பத் இடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.  மதிமுகவில் தாம் ஓரங்கட்டப்படுவதாக தொடர்ந்து பேசி வந்தார் நாஞ்சில் சம்பத்.
வைகோவை கடுமையாக விமர்சித்து பத்திரிகைகளில் பேட்டியும் அளித்து வந்தார் நாஞ்சில்சம்பத்.  மதிமுக இதழான சங்கொலியில் தம்மை குடிலன் என விமர்சித்ததாக சம்பத் புகார் கூறியிருந்தார். 

சாஞ்சியில் மதிமுக நடத்திய போராட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்தார் சம்பத்.  வைகோவுடன் இனி சமரசத்துக்கு பேச்சு இல்லை என்று கூறியிருந்தார் நாஞ்சில் சம்பத்.   இந்நிலையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.