பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012



தேமுதிக எம்.எல்.ஏ.சுபா  போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு 

கெங்கவல்லி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுபா இன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியு தலைவாசல் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே என் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து இருப்பதாகவும் எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். அவருடன் மாநில துணை செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், அழகாபுரம் மோகன்ராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் வந்திருந்தனர்.