பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2012


மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
குஞ்சுக்குளத்திற்கான தரை வழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்திலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர்மட்ட அளவு 14.2 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.இதேவேளை, குறித்த பாதைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராம மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனரென அவர் மேலும் தெரிவித்தார்.