பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2012


கனேடிய அதிகாரிகளிடம் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளார்
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இராணுவத்தில் கடமையாற்றிய ரவீந்திர சந்தனகே என்ற கப்டன் கனேடிய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
அகதி அந்தஸ்து கோரி முன்வைத்த மேன்முறையீட்டை அந்நாட்டு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால் விரைவில் குறித்த இராணுவ அதிகாரி நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டு வூசு போட்டிகளில் பங்கேற்பதற்காக கனடாவிற்கு சென்ற குறித்த இராணுவக் கப்டன் அங்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார்.
அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு போலித் தகவல்களை வழங்கியுள்ளதாக  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.