O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை; மட்டு. மாவட்டத்தில் சோகம் |
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க் கிழமை பிற்பகல் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாங்காடு விஸ்ணு ஆலய வீதியில் உள்ள வீட்டில் வினோதினி (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என களுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை முடிந்து வீட்டுக்குவந்த குறித்த மாணவி உணவருந்திய வேளையில் வீட்டில் உள்ளோர் தமது தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். இந்தவேளையில் தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர் மகள் சடலமாக தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் உள்ள விளையாட்டு மைதானத்தானத்துக்கு அருகில் உள்ள மரத்தில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் காஞ்சி ரங்குடாவை சேர்ந்த ப.ஜெகன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பட்டிப் பளை பொலிஸார் தெரிவித்தனர்.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼