பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2012


த்ரிஷாவின் ‘ரம்’! நடிகைகளின் கி(ளி)க்!


நடிகை த்ரிஷா அடுத்ததாக ‘ரம்’(RUM - Ranba Urvasi Menaka) என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ரம்பா, ஊர்வசி, மேனகாவாக மூன்று நடிகைகள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதில் ரம்பா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். மூன்று மொழிகளில் உருவாகும் இந்த கன்னடப் படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு த்ரிஷா அறிமுகமாகிறார். ஹீரோ இல்லாத இந்த படத்தின் கதை, நடிகைகளை மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறதாம்.

      
கன்னடத்தில் ஒக்கடு, வர்ஷம் 
போன்ற ஹிட் படங்களை கொடுத்த எம்.எஸ்.ராஜு இந்த படத்தை இயக்கி தயாரிக்கிறார். ’ரம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்குகிறதாம். தமிழில் இளம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் த்ரிஷாவிற்கு கன்னடத்திலும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதாம். 

தமிழ். தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து புகழ்பெற்றுவிட்ட த்ரிஷா கன்னட உலகில் கால் பதித்திருப்பது, அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.