பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


துடியலூர் விருந்தீஸ்வரர் கோவிலில் ராமகோபாலன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
துடியலூர் வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாக முடிவடையாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக இந்து முன்னணி சார்பாக மாவட்ட பொருளாளர் தியாகராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஜெயகார்த்திக் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அறநிலையத் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி நிறுத்தலைவர் ராமகோபாலன் தலைமையில் வருகிற 27-ந் தேதி மாலை கோவில் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இந்து முன்னணி நிர்வாகி தியாகராஜன் தெரிவித்தார்.