பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2013


இணையத்தளங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்: அரசாங்கம்

புதிய ஒழுங்குமுறைகளுக்கு அமைய, இலங்கையில் செயற்படும் இணையத் தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுக்கட்டணங்களை செலுத்தி இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய, இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாவும், ஆண்டு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
.