பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் 8 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி. தலதா அத்துக்கோரள எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத் தகவலை வெளியிட்டார்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை முறையாக ஒவ்வொரு ஆண்டிலும் 02,01,02,02,01 என மொத்தமாக 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.