பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2013


பிரேசில் இரவு விடுதி தீ விபத்து: பலி 245ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 159 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சான்டா நகரில் உள்ள கிஸ் (KISS) என்ற இரவு விடுதியில், நெருப்பை பயன்படுத்தி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, இந்த விபத்து நேரிட்டது. விடுதியின் மேற்கூரையில் பிடித்த தீ, பிற அரங்கின் பிற பகுதிகளுக்கும் பரவியதில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட போது விடுதிக்குள் சுமார் 500 பேர் இருந்துள்ளனர். நெருப்பால் ஏற்பட்ட நச்சுப்புகையை சுவாசித்ததால் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

.