பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2013


விஸ்வரூபம் படத்தை ஜனவரி 25ல் வெளியிட தமிழக அரசு தடை

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும்,
அந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சியினர் 23.01.2013 புதன்கிழமை சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, விஸ்வரூபம் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி முஸ்லிம் அமைப்பினர் இன்று உள்துறை செயலாளரிடம் மனு அளித்தனர்.
இதனால் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு 15 நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.