பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
தந்தையின் விஸ்வரூப சர்ச்சையில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்தமகளான நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவர் லக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றியாகததால் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பினார்.
இவர் நடித்த அனகா ஓ தீரடு படம் பெரிய வரவேற்பை பெற்றதுடன் இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதும் பெற்றார்.
தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காகவும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள இவர், இன்று தன் 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இன்று கமல்ஹாசனின் வாழ்க்கையிலும் முக்கியமான நாளாகும். விஸ்வரூபம் தடை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.