பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2013


இறுதிவரை இலங்கையுடன் போராடி தோற்றது ஆஸி: இலங்கைக்கு இரண்டாவது வெற்றி


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 


இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

பதிலுக்கு அவுஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் வேளையில் மழை குறுக்கிட்டது. 

இதன் காரணமாக டக்வத் லுவிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.