பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2013


தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுள் புனர்வாழ்வுபெற்ற 313 உறுப்பினர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர்
தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுள் புனர்வாழ்வுபெற்ற 313 உறுப்பினர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர் எனவும் மேலும் 427 பேரே புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும் அவர்களும் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவர் எனவும் அமைச்சர் சந்ரசிறி கஜதீர தெரிவித்தார்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களை, வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவமொன்றில் அமைச்சர் சந்ரசிறி கஜதீரவினால் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகளிலுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் அவர்களது வழக்குகள் அடிப்படையில் வெவ்வேறு கட்டங்களின் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டதன் பின்னர் சுமார் 1400 புலிச் சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது சுமார் 800 பேர் வரையிலானோரே புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் ஏனையோர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சந்ரசிறி கஜதீர மேலும் கூறினார்.
இந்த வகையில் எஞ்சியிருப்போரும் விரைவில் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவர் எனவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் அமைச்சானது, நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.