பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


48 மணி நேர தடுத்து வைக்கும் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! சட்டமூலம் 77 வாக்குகளால் நிறைவேற்றம்

கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த சட்டமூலத்தின் இராண்டாம் வாசிப்பே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.நீதிமன்றத்தின் உத்தரவின்றி சந்தேக
நபர் ஒருவரை பொலிஸார் 48 மணி நேரம் தடுத்துவைக்கும் வகையிலான புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
முன்னிலை சோஷலிச கட்சியினர் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முன்னிலை சோஷலிச கட்சியினரால் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, கோட்டை பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
48 மணி நேர தடுத்து வைக்கும் சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 48  மணித்தியாலங்கள் தடுத்துவைக்கலாம் என்ற குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.