பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2013


ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் புதுவருட கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்று கூடிய போது ஏற்பட்ட சன நெரிசலில் 60 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வானவேடிக்கையை பார்ப்பதற்காக ஃபெலிக்ஸ் ஹூபுவேட் பூங்னி
எனும் மைதானத்தில் நேற்றிரவு பொதுமக்கள் ஒன்று கூடிய போதே இந்த சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மைதானத்திற்கு வெளியே கைவிடப்பட்ட சப்பாத்துக்களையும், இரத்தக்கறையையுமே அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு தங்களது உறவினர்கள், நண்பர்கள் குறித்த சன நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனரா இல்லையா என்றே இன்னமும் தெரியவில்லை.