பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜன., 2013

கனடாவில் பனியில் விழுந்தது பேருந்து: 9 பேர் பலி

வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர்.

மாநிலங்களுக்கு இடையிலான இண்ட்டர் ஸ்டேட் 84 நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த சரிவிற்குள் வழுக்கிச் சென்று கவிழ்ந்தது.
சாலைகளில் பனிபடர்ந்து இருந்ததால் சக்கரங்கள் வழுக்கிவிட்டன.
ஓட்டுநர் உயிர் பிழைத்தாலும் காயங்கள் மோசமாக இருப்பதால் விபத்து பற்றி அவரால் எதையும் விளக்க இயலவில்லை.
லாஸ் வேகாஸின் நேவாடாவுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பகல் 10.30 அளவில் விபத்துக்குள்ளான போது அதில் 40 பேர் இருந்தனர்.
இவர்களில் காயம்பட்ட 18 பேர் கெண்டில்ட்டனில் உள்ள தூய அந்தோனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
படுகாயமுற்றிருந்த வேறு சிலர் அவசர வானூர்தி வழியாக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்து பத்து, பனிரெண்டு மீட்டர் ஆழத்தில் விழுந்ததால் அதன் கூரை நசுங்கியது முன்பகுதியும் சிதைந்து போனது.
மீட்புப் படையினர் கயிறு கட்டி இறங்கி பயணிகளைப் பள்ளத்திலிருந்து மீட்டனர்.
காவலதிகாரி மேற்கு மூலையில் "செத்தவன் கனவாய்" என்ற பகுதியில் நடந்ததாகக் கூறினார்.
இந்த பேருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மி ஜு டூர் & ட்ராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.