பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2013


அரசியலில் இருந்து விலகுகிறேன்:
 ராமதாசுடன் நட்புடன் இருப்பேன்:
பொன்னுசாமி பேட்டி
 
பாமகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எ.பொன்னுசாமி இன்று (11.01.2013) காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 55 வருடங்களாக பாமகவில் டாக்டர் ராமதாசுடன் நட்புடன் பழகி வந்துள்ளேன். கட்சியில் எடுக்கப்படும் முக்கிய கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியில் இருந்துகொண்டு நான் எதிர்த்தால் அது சரியாக இருக்காது. எனவே அரசியலில் இருந்து விலகி, டாக்டர் ராமதாசுடனும், அவரது குடும்பத்துடனும் நட்புரவை இழக்க விரும்பாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன்.



குறிப்பாக அன்புமணி ராமதாஸ், விருத்தாசலம் டாக்டர் கோவிந்தசாமி, எம்எல்ஏ குரு, டாக்டர் அண்ணாச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் என எல்லோரையும் நட்பு ரீதியில் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமைதியாக சமூக பணிகளிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். என் எதிர்காலம் கால தேவனின் கரங்களில்...
இவ்வாறு கூறினார்.

பொன்னுசாமி 1999 முதல் 2009 வரை 2 முறை சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருந்தார். 99 முதல் 2001 வரை இணை மந்திரி பதவியில் இருந்தார்.