பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013

ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராக, பதவி வகித்தவர், நாஞ்சில் சம்பத். கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கொள்கை பரப்பு துணைச் செயலராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2003ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்டிருந்த, மூன்று அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற, சென்னை, செஷன்ஸ் கோர்ட்டுகளில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்டிருந்த, அவதூறு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு பொறுப்பான, நீதிபதி மீனா சதீஷ் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், விடுதலை செய்வதாக, நீதிபதி மீனா சதீஷ் உத்தரவிட்டார்.