பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2013

திரும்பிப் பார்க்கிறேன் -எனது இணையதள பணியில் புங்குடுதீவு 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அன்பான உறவுகளே ,
நான் எழுதும் இந்த மடல் அநேகமானவர்களுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தாலும் ஒரு  சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்த மடலை எழுத தூண்டிய விசயமே கடந்த ஓரிரு தினங்களாக எமது இணையத்தை தடுத்தாளவோ அன்றி முற்றிலுமாக நிறுத்தவோ சில விசமிகள் அதி விசேச தாக்குதல் வழிகளை கையாள்வது கண்டுள்ளோம் .கடந்த யூலை 2012 இல் இப்படியான முயற்சி சுவிசில் இருந்து வந்தது. இந்த தடவை இந்தியாவில் இருந்து நடத்தபடுகிறது.நாம் பலமாக உள்ளோம்.எமது இணைய சேவை உலகிலேயே அதி சக்தி வாய்ந்த கூகுள்  உடனான ஒப்பந்த அடிப்படை முறையிலானது.ஆதலால் இந்த தாக்குதல்களை நாம் வெற்றி கொள்கிறோம் .ஊடக நாகரீகம் கருதி வேறு விபரங்களை தர விரும்பவில்லை இனி இந்த இணையம் பற்றிய அடிப்படை தகவல்களை உங்களோடு பரிமாற  உள்ளேன் .

ஆரம்பத்தில் இணைய அறிவு இல்லாத பொது வேறு ஒரு நாட்டில் இந்த இணை யத்தை ஆரம்பித்தோம்(www .pungudutivu .ch ) . அனால் அது நடைமுறை சாத்தியம் இல்லாத கஷ்டங்களை உண்டு பண்ணியதால் நானே சுயமாக முயன்று கற்றுக் கொண்டு இந்த புதிய இணையத்தை உருவாக்கினேன்(www .pungudutivuswiss .com ).இது எனது நீண்ட நாள் அவாவும் கூட. எனது பிறந்த ஊருக்காக சுமார் 120 வலைப்பதிவுகளை உருவாக்கி இந்த மாபெரும் இணையத்துடன் இணைத்துள்ளேன் .புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இந்த இணையம் எமது ஊரின் அமைப்பொன்றின் பெயரில் இயங்கினாலும் தன்னந்தனியாக  நான் மட்டுமே அத்தனை தயாரிப்புக்களையும் செய்து இயக்குகிறேன் .தனியே ஊருக்கான இணையமாக இல்லாது செய்தி சேவையையும் இணைத்து திறம்பட இயக்கியதன்  மூலம் தினமும் வாசகர்களை எம் இணையத்தை நோக்கி வரவழைப்பதில் வெற்றி கண்டுள்ளோம் .நான்கு வருடங்களை கடக்கும் இவ்வேளையில் தனியொருவனாக சுமார் 10 000 பக்கங்கள் அல்லது தொகுப்புக்களை இந்த இணையத்தில் மட்டும் இணைத்துள்ளேன்சுமார் 4300 நிழல்படங்களை தேடி எடுத்து கோர்த்துள்ளேன்  இதனை விட சிறிய கிராமங்கள் பாடசாலைகள் நிழல் படங்கள் மகிழ்வூட்டும் தளங்கள் ஆலயங்கள் சனசமூக நிலையங்கள் என தனித் தனியே சுமார் 120 இணையன்களாக  கொர்க்கபடுள்ளன.
ஒரு சில வருடங்களுக்கு முன்னே கூகுளே போன்ற தேடு தளங்களில் புங்குடுதீவு என்று தேடி பார்த்தால் சுமார் 10 படங்களும் சில செய்திகளும் மட்டுமே  வந்தன.எமது ஊர் ஒரு பெரிய கிராமம்.15 பாடசாலைகள் 20 பெரிய கோவில்கள் என நிறைந்த பெருமை கொண்டது.இதனை விட தனி ஒரு ஊரை சேர்ந்தவர்கள் என்று பகுப்பாய்வு செய்தால் புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களே முதல் இடத்தை பிடித்துள்ளார்கள்.அனால் எமது ஊருக்கான தகவல்கள் ஆவணங்கள் செய்திகள் படங்கள் என்பவற்றை கணணி வலை உலகத்துக்கு கொண்டுவருவதில் பின்னின்றோம் என்பதே உண்மை. இந்த மந்த நிலையை உடைத்தெறிந்து வரலாற்றை பதிவு செய்ய நான் எத்தனையோ இரவு பகலாக  உழைத்துள்ளேன் .இப்போதெல்லாம் நீங்கள் கூகுள்   இல் சென்று தேடினால் வருகின்ற அத்தனை படங்களும் எமது இணையத்தின் மூலம் உள்ளே வந்தவை என்பதனை யாரும் மறுக்க முடியாது. அண்மைக்காலமாக புது புது இணையங்கள் முக நூல் பதிவுகள் எல்லாம் எமது ஊரின் பெயரால் முளைத்துள்ளன. இருந்தாலும் எதிலுமே எதுவுமே  சொந்த முயற்சியினால் உருவாக்கபட்டவையாக இல்லை.எமது இணையத்தில் அல்லது எமது உழைப்பை உறிஞ்சி தமது முகவரியை தேடிக்  கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். பிரதி பண்ணுபவைக்கு நன்றி  மூலம் என்று கூட போடுவதே இல்லை  இறுதியாக எனது இந்த வெற்றிக்கு நான் எதிர்பா ர்த்தவர்களை விட எதிர்பாராதவர்களே ஆதரவும் ஊக்கமும் தந்துள்ளது புலனாகியது.உண்மையில் என்னோடு கற்றவர்களும் என்னிடம் கற்றவர்களும் உலகெங்கும் இருந்து என்னை பாராட்டி ஆதரித்தார்கள்.மறக்க முடியாதவை என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அவர்களுக்கு. நான் சமூக சேவையில் எத்தனையோ இடைஞ்சல்களை கண்டுள்ளேன் , முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் .என் புங்குடுதீவு மண் மேல் கொண்ட அன்பின் முன்னே எல்லாவற்றையும்   தவிடு பொடியாக்கி வென்றே செல்வேன் நன்றி
உங்கள் சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து . pungudutivu 1@gmail .com