பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2013


பாதுகாப்பு இணையத்தள ஊடுருவல் செய்தியை ஹுலுகல்ல ஏற்கவோ, மறுக்கவோ இல்லை!

இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை.
இலங்கையின் பத்திரிகை ஒன்று அவருடன் இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, இல்லை, அவ்வாறு இருந்தால் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இணையத்தளம் கடந்த 17ம் திகதியில் இயங்கமாலுள்ளது.
எனினும் இலங்கை கணணி அவசர மாற்றுநடவடிக்கை குழு, தமக்கு இது ஊடுருவல் குறித்த முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது.
ஊடகங்களின் மூலமே தாம் இது தொடர்பான செய்தியை அறிந்துகொண்டதாக அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது.