பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2013


வவுனியா பற்றைக் காட்டில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை
காலை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் இவர் பூநாவை பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையில் இருந்தாரெனவும் மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி காணாமல் போயிருந்தாரெனவும் இது தொடர்பில் இவரது தாயார் இம்மாதம் 6ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது