பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2013


அகதிகள் படகு நடுக்கடலில் விபத்து: இருவர் பலி ஒருவர் மாயம்

சட்டவிரோதமாக ஆஸி. சென்ற இலங்கை அகதிகள் படகு, இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
.

இவ்விபத்தில் 4 வயது சிறுவனும் 10 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துக்கு உள்ளான படகில் பயணித்த மேலும் 20 பேர் இந்தோனேசிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருந்த போதும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 

படகின் எஞ்சின் உடைந்ததாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் காப்பாற்றப்பட்டோர் செமரங்கிலுள்ள அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.