பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2013



தமிழ்நாட்டின் புதுவை அருகே உள்ள அனுச்சைக் குப்பம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகதி முகாமில் வசித்து வரும் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுச்சை குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24).
இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் தினமும் புதுவைக்கு வந்து கட்டிட தொழில் செய்து விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். நேற்று மாலை தொழில் முடிந்த பின்னர்,ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையில் இருந்து இரசாயன பொருள் ஏற்றி வந்துகொண்டிருந்த லொறி, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 3 பேருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கோட்டக்குப்பம் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.