பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2013


இறுதிப்போரில் இராணுவத்தின் நகர்வுகள்! வரைபடக் கண்காட்சி நிலையம் படையினரால் புதுக்குடியிருப்பில் அமைப்பு
வன்னியில் இடம்பெற்ற இறுதி  யுத்தத்தின் போது இராணுவத்தினரின் நகர்வுகள் குறித்த விளக்க வரைபடக் கண்காட்சி தகவல் நிலையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் அரம்பித்த காலம் தொடக்கம் அதன் நிறைவு வரை படையினரினரின் நடவடிக்கையைச் சித்தரிக்கும் வகையில் இக்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆத்தோடு எந்தெந்த படையணி எவ்வழியால் தமது நகர்வுகளை மேற்கொண்டது தொடர்பில் இதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நவீன ரக ஆயுதங்களின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.