பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2013


புதிய கூட்டணி  : தேமுதிக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
 நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு கூடியது.  கூட்டத்தில் மா.பா. பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தல். இதில் நம் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல்
கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். அவரை தொடர்ந்து பேசிய அனைவரும் சட்ட சபை தேர்தலில் வேண்டுமானால் தனித்து போட்டியிடுவது பற்றி யோசிப்போம். இப்போது புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்றனர். 


இதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிக்கலாம் என்று எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்தனர்.

ஆனால் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் நழுவினார். மின் வெட்டு, பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, விவசா யிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கோடிட்டு காட்டி அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். தனது திருமண மண்டபத்தை இடித்தது போன்ற கோபதாப ங்கள் தி.மு.க. மீது இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் பேசியபோது, கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கி உள்ளீர்கள். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் உள்ளது. இப்போதே கூட்டணி பற்றி எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு கட்சிப் பணி முதன்மையாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி அமையுங்கள். கொடி பறக்காத ஊர்களே இல்லாத நிலையை உருவாக்குங்கள்.

அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் தே.மு.தி.க.வி னரை சேர்த்து கொள்கிறார்கள் என்றால் தே.மு.தி.க. செல்வாக்கு பெற்று இருப்பதாகத்தானே அர்த்தம். இப்போது நான் தி.மு.க.வை தாக்கி பேசாமல் இருக்கலாம். ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதிரான பிரச்சினையில் தி.மு.க.வையும் எதிர்த்து திட்டி பேசி இருக்கிறேன். நான் எதற்கும் பயப்படமாட்டேன். எந்த சூழ்நிலையிலும் மக்களோடும், தெய்வத்தோடும் தான் என் கூட்டணி என்று கூறினார்.