பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2013


விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கைவிஸ்வரூபம் தீர்ப்பு தள்ளிப் போகிறது..இரவு 10 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல், “விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல் பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடாக 100 கோடி ரூபா பணத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும்” என்று வாதம் செய்ததாக தெரிகிறது.


“மத்திய தணிக்கை சபையால் தணிக்கை சான்றிதழ் கொடுத்த படத்தை தமிழக அரசு, மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தியேட்டரில் வெளியிட முடியாமல் தடை செய்த காரணத்தாலேயே, இந்த நஷ்டம் ஏற்படப் போகின்றது. எனவே, தமிழக அரசே நஷ்டத்துக்கு பதில் சொல்ல வேண்டும்” எனவும் வாதம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
படத்தின் வசூலில் கிடைக்கும் தொகை 100 கோடி ரூபாவுக்கு அதிகமாக போனால், தமிழக அரசு கோர்ட்டில் செலுத்தும் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.