பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2013


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குற்றவியல் பிரேரணையின் இறுதி முடிவு ஜனாதிபதியின் கைக்கு சென்றுள்ளது.இந்த அறிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திட்டு, மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் .எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் ஜனாபதி இன்னும் கைச்சாத்திடவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். 
 
அரசின் உள்ளக தகவல்களின் படி புதிய நீதியரசர் ஒருவர் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 18 ஆம் திகதி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவு செய்யப்படலாம் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
.