பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2013

யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் இராணுவ அராஜகத்தின் உச்சமாக மாவட்டங்களின் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான அனுமதியினை ஜனாதிபதியின் விசேட செயலணி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய மேற்படி மாவட்டங்களின் கல்வி வலயங்களும் பாடசாலைகளில் இராணுவத்தினர் கற்பிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருக்கின்றன.

இந்நிலையில் 1ம் தவணைக்காக நேற்று பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டபோது சிங்கள மொழி கற்பிக்கப்போவதாக கூறிக்கொண்டு, சீருடைகளுடன் இராணுவச் சிப்பாய்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்திருக்கின்றனர்.

இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கடுமையான குழப்பமடைந்திருக்கின்றனர். இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேற்படி இரண்டு மாவட்டங்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் ஊடகங்கள் பேச முற்பட்டுள்ளன. ஆனாலும் ஊடகங்கள் என்றவுடன் கல்வி அதிகாரிகள் தொலைபேசியை வைத்துவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர். சில அதிகாரிகள் அப்படியா தமக்கு எதுவும் தெரியாதே, நாங்கள் கூட்டமொன்றுக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என கூறிக்கொண்டு தப்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் மிகவும் நகைப்பிற்கும், ஆத்திரத்திரத்திற்குமுரியது என கூறியுள்ளார். அதாவது 6வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் இணைந்த படைச்சிப்பாய்கள் எமது பிள்ளைகளுக்கு கற்பிப்பது எவ்வாறிருக்கும் என கேட்டுள்ள அவர், இந்த இழிநிலையினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.