பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2013



கொழும்பில் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

கொழும்பு மட்டக்குளி மல்வத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இராமசாமி யோகேஸ்வரி என்ற இரண்டு குழந்தைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.


இந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கையில்,

46 வயதுடைய இராமசாமி யோகேஸ்வரி என்ற இரண்டு குழந்தைகளின் தாய் நேற்று காலை 9.30 மணியளவில் எரிக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுகவீனம் காரணமாக வத்தளையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து வந்ததாகவும் குடும்பத்தில் பிரச்சினை காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எரிகாயங்களுடன் மேற்படி பெண் சடலமாக மீட்கப்பட்ட போதிலும் அவரின் மரணம் தொடர்பில் குடும்பத்தார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவரது கணவரான 48 வயதுடைய சண்மூகம் மனோகரினிடம் பொலிஸார் விசாரித்துள்ளனர்
.