பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2013


சவால் விட முடியுமா?
ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏ கேள்வி!
சங்கரன்கோவில் இடைதேர்தல் போல், லோக்சபா தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா சவால் விட முடியுமா? என, தே.மு.தி.க., எதிர்கட்சி
கொறடா சந்திரகுமார் கேள்வி எழுப்பி

னார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மின்தடையை கண்டித்து நடந்த கூட்டத்தில், தே.மு.தி.க.,எதிர்கட்சி கொறடா சந்திரகுமார் பேசியதாவது: 
சட்டசபை தேர்தலில் 40 இடத்தில் தே.மு.தி.க., போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட, தே.மு.தி.க., விற்கு ஓட்டு போடுங்கள் என, ஜெயலலிதா பேசவில்லை. அதேவேளையில், ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில், அவருக்கு விஜயகாந்த் ஓட்டு கேட்டார். 
மின்தடை பிரச்சனையை மூன்று மாதத்தில் தீர்ப்போம் என, தேர்தலுக்கு முன் கூறினார், பின் ஆண்டு முடிவில் என்றார், தற்போது 2013 ஜூன் என்கிறார். மின்தடையை நீக்க ஜெயலலிதா திட்டமிடவே இல்லை. 
சங்கரன்கோவில் இடைதேர்தலில் சவால் விட்ட முதல்வர், வரும் லோக்சபா தேர்தலிலும் ஜெயித்துகாட்டுகிறேன் என, சவால் விட முடியுமா? தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டார். பஸ் பாஸ் இருந்தும், பஸ் வசதி இல்லாததால், பள்ளிக்கு நடந்து சென்றவர் கொலையானார். இதற்கு யார் காரணம். 
பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., கொலை. திருப்பூரில் 14 கோடி மதிப்புள்ள நகை திருட்டு நடந்து உள்ளது. நிர்வாக திறமையின்மையால், ஜாதி கலவரம் நடக்கிறது. மக்களை ஏமாற்றும் ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடக்கிறது என்றார்.