பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2013


பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது
இந்திய அரசின் பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன.


பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகுர் பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  நடிகை ஸ்ரீதேவி, நானா படேகர், திரைப் பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது,.
கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மறைந்த திரப்பட நடிகர் ராஜேஷ் கன்னா, ஜஸ்பால் பட்டி, ஆதி கோத்ரேஜ் உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷன் வழங்கப்படுகிறது.
கலை வல்லுநர் ரகுநாத் மஹாபத்ரா, ஓவியர் ஹைதர் ரஸா ஆகியோர் பத்ம விபூஷன் பெறுகின்றனர். பத்ம விபூஷன் 4 பேருக்கும் பத்ம பூஷன் 24 பேருக்கும் பத்மபத்மஸ்ரீ விருதுகள் 80 பேருக்கும் அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து டாக்டர் டி.வி.தேவராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக் கப்பட்டுள்ளது