பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2013



மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான பிரசவ மருத்துவமும் செய்துள்ளார்.

இந்தப் போலி மருத்துவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் இரு மருத்துவர்கள் உதவியாக இருத்துள்ளதுடன், தங்களின் மருத்துவ உபகரணங்களையும் போலி மருத்துவம் செய்வதற்காக வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த போலி வைத்தியர் படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாகவும், தான் இந்தப் பணத்தைக் கொண்டு ஐரோப்பிய நாடொன்றிற்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.