பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2013


வன்னி பிரதேச பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தம்!- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
வன்னிப் பிரதேச தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநரிடமும் வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளரிடமும் தொடர்புகொண்டு நிலைமைகளை விளக்கியிருந்தது.
வடமாகாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்க இராணுவத்தினரை நியமித்தது வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை மூடிமறைக்கும் செயலெனவும், பாடசாலைகளை இராணுவமயப்படுத்தும் செயலெனவும், தமிழ்பேசும் கல்வித்துறை அதிகாரிகளை சமூகம் தூற்றவைக்கும் செயலெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உரிய தரப்பினர் உடடியாக இராணுவத்தினரை விலக்கிக்கொள்வதாக உறுதி அளித்தனர் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன், தலைவர். வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.