பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2013



இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அவர், ஆம், இலங்கைக்கு செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.