பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2013


படுகொலை குறித்த தொகுப்பு அனைத்து மொழிகளிலும் - வைகோ அறிவிப்பு!


ஈழப்போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


இதில் ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். அடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடுகிறோம். 

தமிழகத்தை இப்போது மிகவும் அச்சுறுத்திக் கொண்டு இருப்பது மது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஸ்ரீவைகுண்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. 

இவை அனைத்திற்கும் மதுதான் காரணம். எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். இதற்காக ம.தி.மு.க. போராடி வருகிறது. 

நான் நடத்திய நடைபயணத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் குமுறிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.