பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2013


விஸ்வரூபம் மீதான தடை நீக்கம்

தமிழக அரசினால் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



முஸ்லிம் தலைவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசினால் 15 நாட்கள் தடை செய்யப்பட்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் மீளப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த படி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என தற்போது தெரிவிக்கப்படுகிறது
.