பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2013


ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


சி.பி.ஐ., இயக்குனராக, ரஞ்சித் சின்கா நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., மேலிட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த சட்ட நிபுணருமான, ராம்ஜெத்மலானி, பா.ஜ., தலைவர்களின் நிலைக்கு, கடும் கண்டனம் தெரிவித்தார். கட்சி தலைவர் நிதின் கட்காரி மீது, ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து, அவரை, பதவியை ரா

ஜினாமா செய்யும்படியும், ராம்ஜெத்மலானி வலியுறுத் தினார்.இதையடுத்து, நவம்பரில், கட்சியிலிருந்து, ராம்ஜெத் மலானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, நிதின் கட்காரி ஆகியோரை, ராம்ஜெத்மலானி, நேற்று சந்தித்து பேசினார்.இதன்பின், ராம்ஜெத்மலானி கூறுகையில், ""பா.ஜ., தலைவர்களுடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது பற்றி, மீடியாக்களிடம் தெரிவிக்க முடியாது. என்னை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து, பா.ஜ., மேலிடம், விரைவில் முடிவு எடுக்கும்,'' என்றார்.