பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2013


தொப்பிகலையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு: புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.


வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை மீட்டனர்.
இதில் ஆர்.பி.ஜி. சாஜர் 20,60 ரக மோட்டார் குண்டு 04, ஆர்.பி.ஜி குண்டு 04, 60 ரக மோட்டார் குண்டு, சாஜர் 06 என்பன உரப்பையில் கட்டி புதைக்கப்பட்ட நிலையில் இருந்து இவ் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இது விடுதலைப் புலிகளால் யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது என்றார்.