பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2013


எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை
இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரே ஏற்பாடுசெய்தனர் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நடைபெற்ற ஊர்வலத்தில் , பொன்காந்ததுக்கு எதிராகவும், எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும் பதாதைகள் பிடிக்கப்பட்டது. 

தற்போதைய சூழ் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்துள்ளது. இதேவேளை எம்.பிஸ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய ஆதரவு காணப்படுகிறது. இந் நிலை நீடித்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக ஸ்ரீதரன் அவர்களே தேர்வாகும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அவர் செல்வாக்கை சரியச் செய்ய, இலங்கை இராணுவம் பல திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமே அவரது அலுவலகத்தில் குண்டு இருந்தது என்றும், ஆபாசப் படங்கள் ஆணுறைகள் இருந்தது என்றும் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை இராணுவம். இதில் மக்கள் ஒன்றை அவதானித்திருப்பார்கள் என நாம் எண்ணுகிறோம் ! அது என்னவென்றால், சம்பந்தர் ஐயாவோ இல்லை சுமந்திரனோ, இது குறித்து எதுவும் பேசவில்லை. வாய் திறக்காமல் இருக்கிறார்கள். 

இதனூடாகவே இலங்கை அரச புலனாய்வு செய்யும் காரியங்களுக்கு இவர்கள் உடந்தையாக இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. ஒரு கட்சியில் இருக்கிறார்கள். தமது கட்சியில் உள்ள சகபாடி எம்.பி ஒருவரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது, புலனாய்வுத் துறை அவர் மீது அத்துமீறிச் செயல்ப்படுகிறது. ஆனால் சம்பந்தரோ இல்லை சுமந்திரனோ எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லையே அது ஏன் ? யாராவது பதில் கூறினால் நல்லது.







Send To Friend |    செய்தியை வாசித்தோர்: 3720