பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2013


கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுதலை
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநயக்கா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நான்கு மாணவர்களும் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகளில் அவர்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தால் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள்.
எனினும், தைப்பொங்கலுக்கு முன்னர் அவர்கள் நால்வரும் விடுதலையாகக் கூடும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட பின்பும் அங்கு கல்விப் பணிகள் முழுமையாக நடைபெறாவிட்டால், அதை மூடப்போவதாகவும் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.BBC