பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2013



டைரக்டர் பாலசந்தர் மகள் மீது டைரக்டர் பாக்யராஜ் மீண்டும் குற்றச்சாட்டு
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம், நான் நடித்து, டைரக்டு செய்த இன்று போய் நாளை வா படத்தின் கதை என்றும், எனவே,
அதற்கு நஷ்டஈடாக ரூ.2 கோடி தரவேண்டும் என்றும், டைரக்டர் பாக்யராஜ், போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.


இந்தப்படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சநதித்த பாக்யராஜ்,  ‘’தமிழ் பட உலகில், எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல் லாத நிலை உள்ளது.

இத்தனை வருடமாக சினிமாவில் உள்ள எனக்கே யாரும் உதவ முன் வரவில்லை.  மற்றவர்களின் கதி என்ன என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
எனக்கு ஏற்பட்ட பாதிப்பு, எதிர்காலத்தில் மற்றவர் களுக் குக்கூட நடக்கலாம். அதற்காகவே நான் ஐகோர் ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
இந்த பிரச்சினை தொடர்பாக புஷ்பா கந்தசாமி, என் மனைவி பூர்ணிமாவை 2 முறை சந்தித்து பேசினார். பிரச்சனையை பெரிதுபடுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அதை அவர் இப்போது மறுக்கிறார்’’என்று கூறினார்.
கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக பாலசந்தர் மகள் மீது பாக்யராஜ் கூறிய குற்றச்சாட்டுக்கு, புஸ்பா கந்தசாமி மறுத்தார்.  பாக்யராஜ் மீது அவதூறு வழக்கு தொரப்போவதாகவும் கூறினார்.  இந்நிலையில் பாக்யராஜ் மீண்டும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.