பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2013


எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை உடல் முழுவதும் தீக் காயங்கள் குறித்த மாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த மாணவியின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு-
எரியுண்ட நிலையில் யாழ். புகையிரத நிலைய வீதியில் மீட்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மாணவி இன்று மாலை 2.50 மணியளவில் உயிரிழந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் பிரச்சினையால் இவ் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் மாணவி எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் எஸ். துளசிக்கா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.