பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2013


ஜார்க்கண்டில் குடியசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை பரிந்துரை
ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

புது தில்லியில் இன்று (17.01.2013) பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது.

ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, வேறு எந்த கட்சிகளும், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இன்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது.