பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2013


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின்  துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து சீ-4 வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேளமாளிகிதன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு வெடிமருந்து உள்ளிட்ட சிலவற்றை மீட்டதாக தெரிவித்து எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியின் தலைமைப் பீடத்திற்கு முழுமையான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அறிகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுகின்றது. எமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விடயங்கள் தொடர்பாக சட்ட ரீதியாகக் கையாள்வதற்குரிய சகல நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொண்டு வருகின்றது என்றார் சிவஞானம்.