பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2013


கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு: நல்லூரில் சம்பவம்

யாழ். நல்லூர் பிரதேசத்தில் உள்ள கிணறிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் செட்டித்தெரு பகுதியில் வசித்த கணபதிப்பிள்ளை ஜெகசோதி (வயது 71) என்பவரே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த வயோதிபர் நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள அவரது காணியை பார்க்க வந்துள்ளார். எனினும் இவ்வாறு வந்தவரை காணவில்லை என தேடியபோது, சடலமாக மீட்கப்பட்டதாக வயொதிபரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.