பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2013


மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: 13 பெண்கள் கைது
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது.
இந்த சுற்றி வளைப்பின் போது அங்கிருந்த 13 பெண்கள் விடுதியின் முகாமையாளர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திடீர் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸட அத்தியட்சகர் ரீ. கணேசநாதன் தலைமையிலான குழுவினரே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை பகுதிகள் போன்ற வெளி மாவட்டங்களைச்  சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 22, 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.