பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013


கொழும்பில் 14வயது தமிழ்ச் சிறுவன் தடுத்து வைப்பு! TNAயிடம் முறைப்பாடு!

கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14வயது தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் கிரிஷாந்தன் என்ற சிறுவனே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


1998ம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்த இச்சிறுவன் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் குடும்ப வறுமை காரணமாக கொழும்பு வந்திருந்த போது கடந்த 8ம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புதிய மகஸின் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளான். இச்சிறுவன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறுவனொருவன் சிறையில் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக வெளியாகியூள்ள தகவல்கள் தொடர்பில் மகஸின் சிறைச்சாலையின் அத்தியட்சர் எமில் ரஞ்சனிடம் கேட்டபோது. மகஸின் சிறைச்சாலையில் சிறுவர்களைத் தடுத்து வைத்திருக்க முடியாதெனவூம் இதன்படி இந்த சிறைச்சாலையில் எந்த சிறுவனும் இல்லையெனவூம் அவ்வாறு சிறுவனெவாருவன் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லையெனவூம் தெரிவித்துள்ளார்.