பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013



ராஜபக்சேவின் வருகையையொட்டி 
திருப்பதியில் 144 தடை உத்தரவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி திருமலை கோயிலுக்கு இன்று மாலை வரவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார்.

பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து
 கிளம்புகிறார். ராஜபக்சேவின் வருகைக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதையடுத்து திருப்பதி வரும் அவருக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக திருப்பதி (ரேணிகுண்டா) விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலையில் இன்று மாலை முதல் ராஜபக்சே திரும்பிச் செல்லும் வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலை முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.