பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2013


16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 50 வயது பெருசு கைது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள மணிபுரத்தை சேர்ந்தவர் சிவன், (பெயர் மாரப்பட்டுளது) இவரது மகள் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது-16. சரியான முறையில் படிப்பு
வராத காரணத்தால் தேவி வீட்டில் இருந்து வருகிறார்.
முத்தம்பட்டியை சேர்ந்த கணேசன், வயது-50, என்பவர் அப்பகுதியில் 
ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணியில் கடந்த, 14-ம் தேதி ஈடுபட்டார். அப்போது, பக்கத்திலிருந்த தேவி வீட்டுக்கு அடிக்கடி சென்று குடிக்க தண்ணீர் வாங்கி கொடுத்து வந்தார். இதில், தேவிக்கு, கணேசன் நன்றாக அறிமுகமானார்.
கடந்த, 14-ம் தேதி இரவு, 7 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, கணேசன், அவரது உறவினர்கள் ரமேஷ்,வயது- 45, ராஜி,வயது- 30, ஆகியோர் சேர்ந்து பலவந்தமாக கடத்திச்சென்றனார்.
பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து நேற்று, பொம்மிடி போலீஸில் சிவன் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரனையில்,  மொரப்பூரை அடுத்த செல்லம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கணேசன் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற தேவியை மீட்டனர். தேவியிடம் நடத்திய விசாரணையில், கணேசன், தேவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிந்தது. சிறுமியை கடத்தியது, மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தகுற்றத்துக்காக கணேசனை பொம்முடி போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு துணையாக இருந்த கணேசனின் கூட்டாளிகள் ரமேஷ், ராஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.